RRR Others USA
www.garudabazaar.com

சன்னி லியோனோடு ஜாலியா ஒரு க்ளிக் … பிரபல நடிகர் பகிர்ந்த வைரல் PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் சன்னி லியோனோடு ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Actor sathish with sunny leone latest viral photo

3 years of மஜிலி… நாக சைதன்யாவோடு இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்த சமந்தா!

போர்னோகிராபி to இந்திய சினிமா…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க போர்னோகிராபி நடிகையான சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி தற்போது இந்திய படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் இப்போது தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி தமிழில் அவர் நடிப்பில் oh my ghost என்ற படம் உருவாகி வருகிறது.

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K.சசிகுமார் வழங்க, சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா , மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

Actor sathish with sunny leone latest viral photo

வரலாற்றுக் காமெடியில் சன்னி லியோன்…

வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி திரைப்படமாக “ஓ மை கோஸ்ட்” (OMG) உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களான இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நாளை (ஏப்ரல் 6) ஆம் தேதி 06:04:22 மணிக்கு வெளியிட உள்ளனர். இது குறித்த அறிவிப்பு போஸ்டரில் ‘HOTTEST GHOST EVER” எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

படம் பற்றி இயக்குனர்….

, “OMG என்பது ஓ மை கோஸ்ட் என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம்  படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக, ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

Actor sathish with sunny leone latest viral photo

சதீஷ் பகிர்ந்த புகைப்படம்….

இந்நிலையில் இப்போது நடிகர் சதீஷ் சன்னி லியோனோடு இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ‘சும்மா அப்டியே ஜாலியா சன்னி லியோனோடு ஒரு போட்டோ’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் அதிக கவனத்தை தற்போது பெற்று வருகிறது. சதீஷின் இந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் பலரும் ஜாலியான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரவி தேஜாவுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால்…. Title-ஏ செம்ம… வெளியான motion poster

தொடர்புடைய இணைப்புகள்

Actor sathish with sunny leone latest viral photo

People looking for online information on சதீஷ், சன்னி லியோன், Sathish, Sunny Leone, Sunny Leone Latest Picture will find this news story useful.