www.garudabazaar.com

குடும்பத்துடன் நடிகை ஸ்ரேயாவின் தீபாவளி போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் சூப்பர் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.

Shriya Saran Diwali Photoshoot with Family

Also Read | குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகை பூமிகா.. வைரலாகும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

Shriya Saran Diwali Photoshoot with Family

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

Shriya Saran Diwali Photoshoot with Family

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில  மாதங்களுக்கு முன் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அளவுக்கு தனது குழந்தைப் பிறப்பு குறித்து எந்த ஒரு செய்தியையும் அதுவரை பகிராமல் ஸ்ரேயா சரண் அமைதி காத்தார். மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாக ஸ்ரேயா அறிவித்தார். குழந்தைக்கு ராதா என பெயரிடப்பட்டது. தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது.

Shriya Saran Diwali Photoshoot with Family

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தீபாவளியை முன்னிட்டு கணவர் மற்றும் குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கலாச்சார உடையில் பட்டுப் பாவாடை அணிந்து குழந்தை ராதா காட்சியளிக்கிறது.

Also Read | கமல் & லோகேஷ் பங்கேற்கும் 'விக்ரம்' 100-வது நாள் வெற்றி விழா.. எங்கே? எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Shriya Saran Diwali Photoshoot with Family

People looking for online information on Diwali, Shriya Saran, Shriya Saran Diwali Photoshoot will find this news story useful.