’20 வயசுல நான் இப்படி தான் இருந்தேன்’ – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னடா, தமிழ், ஹிந்தி மொழிகளில் ஏராளமான படம் நடித்தவர் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத். கன்னடத்தில் இவர் நடிப்பில் வெளியான யூடர்ன் படம் இவருக்கு பரவலான கவனத்தை பெற்றுத் தந்தது. பின்னர் அது தமிழிலும் சமந்தா நடிப்பில் வெளியானது.
தமிழில் அவர் ‘காற்று வெளியிடை’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். ’இவன் தந்திரன்’, ’ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்த அவருக்கு புஷ்கர்-காயத்ரி, விஜய் சேதுபதி, மாதவன் கூட்டணியில் வெளியான ’விக்ரம் வேதா’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து பல மொழி படங்களில் கவனம் செலுத்திவந்த அவருக்கு அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்பட வாய்ப்பு கதவைத் தட்டியது. சினிமாவுக்காக வக்கீல் வேலையை விட்ட ஷ்ரதாவின் நடிப்பும், அழகும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் #MeAt20 சேலஞ்சை தானும் ஏற்றுக்கொண்ட நடிகை ஷ்ரதா தனது பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 20 வயதில் அவர் Chubbyயாக இருந்த புகைப்படம் லைக்குகளையும் கமண்டுகளையும் குவித்து வருகிறது.