மாதவன் - ’விக்ரம்-வேதா’ பிரபலம் இணையும் புதிய படத்தில் இந்த ஹீரோயினா?!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 09, 2020 04:12 PM
விக்ரம் வேதா படத்துக்கு பிறகு மாதவன் ’மகளிர் மட்டும்' திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்த அவர் மீண்டும் மாறா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்த ஷ்ரதா ஸ்ரீனாத் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் இதுவாகும்.
இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் ’நெடுஞ்சாலை’, ’அதே கண்கள்’ படத்தில் நடித்த ஷிவதா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. திலிப்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்த திரைப்படத்தை பிரமோத் புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குநர் திலிப்குமார் இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.
Tags : Sshivada, Madhavan, Shraddha Srinath, Maara