’உங்க பெர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுத்துட்டேன்…’ பிரபல ஹீரோயினுக்கு ஹீரோ வாட்ஸாப்!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத். மும்முரமாக நடித்து வரும் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் படம் பண்ணி விட்டார்.

தமிழில் மணிரத்னம் மூலம் அறிமுகமான ஷரதா தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை, அருள் நிதியுடன் கே-13 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்காக வக்கீல் தொழிலை விட்டு வந்த இவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமைந்துவரவே தொடர்ந்து வெற்றிப்படியில் மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானியுடன் இணைந்து ஜெர்சி படத்தில் நடித்துள்ளார். நானி தனக்கு அனுப்பிய வாட்ஸாப் மெசேஜ் ஒன்றை ஷ்ரதா தற்போது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார்.அதில் நானி, ஷ்ரதா ஸ்ரீநாத்தை எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
படத்தில் ஷ்ரதா சேரில் அமர்ந்தபடி தனக்கான ஸ்க்ரிப்டை ஆழ்ந்து வாசித்தபடி இருக்கிறார். இதனுடன் ‘இது உங்க சீன். பிச்சு ஒதறுங்க’ என்று ஷரதாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பியிருந்த நானி, கூடவே ‘உங்க பெர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுட்டேன். அர்ஜுனை (ஜெர்சி படத்தில் நானியின் ரோல்) கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்’ என்று டெக்ஸ்ட் தட்டி விட்டுள்ளார் நானி. தன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க நானி கொடுத்த ஊக்கத்துக்கு ஷ்ரதா இந்த பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.