"தல சொன்னது 100% சரி.." - ரசிகர்களின் FDFS கொண்டாட்டத்தை பார்த்து வியந்த நேர்கொண்ட பார்வை ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 08, 2019 12:22 PM
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இன்று(ஆக.8) உலகம் முழுவதும் வெளியானது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் FDFS அதிகாலை காட்சியை ரோகினி திரையரங்கில் பார்த்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தல ரசிகர்கள் தல-யை கொண்ட்டம் குறித்து ட்விட்டரில் சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார். அதில், “தல ரசிகர்கள் தல அஜித்தை கொண்டாடுவதை பார்த்து வியந்தேன். அஜித் சாருக்கு நன்றி. மிகவும் உறுதுணையாக இருந்தார். அணுகுவதற்கு சிறந்த மனிதர். அஜித் சார் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் இந்த படம் நாம் அனைவரின் வாழ்க்கையை மாற்றும். அவர் சொன்னது 100% உண்மையானது இன்று”.
“இந்த டீமில் நானும் ஒருத்தி என்பதில் மகிழ்ச்சி. ஒவ்வொருத்தரின் நடிப்பும் அற்புதம். இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு நன்றி. உங்கள் மீது எந்த கேள்வியுமின்றி நம்பிக்கை வைத்தேன். இப்படம் என்னை மாற்றிவிட்டது. படத்தை தயாரித்த போனி கபூருக்கு மிக்க நன்றி. இது போன்ற உணர்வுப்பூர்வமாக படம் எடுப்பது சவாலான ஒன்று. படத்தில் உடன் நடித்த அனைவருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்த படம் ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல.. ஒட்டு மொத்த குழுவுக்கும் இந்த படம் சொந்தம்”.
“தல ரசிகர்களையும் தாண்டி 0.00001% எனது நடிப்பை பின் தொடரும் ஆடியன்ஸ்க்கு பெரிய நன்றி” என கூறி, ரசிகர்களின் ஆரவாரம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தையும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ளார்.
Watched the 4 am show of #NerkondaPaarvai today at Rohini. The air was electric. The fans were high on excitement and love for their Thala. I have never received such a warm welcome as the one I received this morning.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 8, 2019