''டெல்லியில் கிளைமேட் ஒத்து வரல...'' - 'பிகில்' அனுபவம் குறித்து ஷோபி மாஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 25, 2019 06:34 PM
தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவியும் நடன இயக்குநருமான லலிதா ஷோபி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது ''சிங்கப் பெண்ணே பாடலை நடனம் அமைப்பதற்கு முன் விவாதம் செய்து Ad Film போல் இருக்கவேண்டும் என்று பேசி உருவாக்கினோம். இந்த பாடலுக்காக நிறைய ஷூட் செய்தோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலில் தோன்றுகிறார் என்று அட்லி சொன்னதும் நிறைய விவாதம் செய்தோம். டெல்லியில் ஷூட் செய்ய பிளான் பண்ணோம்,, கிளைமேட் ஒத்து வரல. அப்போ அட்லி ரஹ்மானை கன்வின்ஸ் பண்ணிட்டதா சொன்னார். அவர் வந்ததும் ஸ்பாட்டே செம ஜாலியா இருந்தது. விஜய் சாரே ரொம்ப என்ஜாய் பண்ணாரு'' என்று குறிப்பிட்டார்.
''டெல்லியில் கிளைமேட் ஒத்து வரல...'' - 'பிகில்' அனுபவம் குறித்து ஷோபி மாஸ்டர் வீடியோ