அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணையும் 'அக்னி சிறகுகள்' பட நடிகையின் கேரக்டர் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'அக்னி சிறகுகள்'. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார்.

Raima Sen Character Look is out from Arun Vijay, Vijay Antony's Agni Siragugal

இந்த படத்தில் அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் லுக் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை ரைமா சென்னின் கேரக்டர் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் ஸ்மிதா என்ற வேடத்தில் நடிக்கிறார்.