'பிகில்' படத்தில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளியான எமோஷனல் பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 24, 2019 09:47 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இதற்குத்தான் என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை Dhee, அர்ஜூன் சாண்டி, சுனிதா சாரதி ஆகியோர் பாட, விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.
'பிகில்' படத்தில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளியான எமோஷனல் பாடல் இதோ வீடியோ
Tags : Bigil, Nayanthara, Atlee, Vijay, AR Rahman