'மாஸ்க்கு முக்கியம் பிகிலு' - டெல்லியில் ஷூட்டிங் குறித்து 'தளபதி 64' நடிகர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தற்போது தலைநகர் டெல்லியில் நடைபெறும் 'தளபதி 64' பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை 'மாநகரம்' 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Shanthanu tweets about actor Vijay's Thalapathy 64 Shooting

இந்த படம் பற்றி படக்குழு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்க் அணிந்த படி இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, ''மாஸ்க்கு முக்கியம் பிகிலு'' என்று குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கடுமையான மாசுப் பிரச்சனை நிலவியது குறிப்பிடத்தக்கது.