www.garudabazaar.com

வடிவேலுவுடன் ஷிவாங்கி.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் BTS படங்களை பகிர்ந்து வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.

Shivaangi Shared Naai Sekar Returns Movie BTS

Also Read | வாரிசு 'தீ தளபதி' பாடல்.. பாடி அசத்திய பாடகர் திருமூர்த்தி! அசரவைக்கும் வீடியோ

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.

'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை செனனையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது‌.

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றுமுதல் திரையரங்குகளில்" என பதிவிட்டுள்ளார். மேலும் பட நிகழ்வில் நடிகர் வடிவேலு அருகில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | KGF நடிகரை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை ஹரிப்பிரியா.. வைரலாகும் நிச்சயதார்த்த PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Shivaangi Shared Naai Sekar Returns Movie BTS

People looking for online information on Naai Sekar Returns, Redin Kingsley, Sivaangi, Vadivelu will find this news story useful.