KGF நடிகரை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை ஹரிப்பிரியா.. வைரலாகும் நிச்சயதார்த்த PHOTOS!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹரிப்பிரியா.

Also Read | திருமணம் ஆன பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா .. மாலத்தீவில் கணவருடன் டூர்.. வெளியான PHOTOS!
தமிழில் கனகவேல் காக்க திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முரண், வல்லக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிக்குமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' திரைப்படத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் பெல் பாட்டோம், உக்ரம், ரிக்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஹரி பிரியா 2007 ஆம் ஆண்டு துளு திரைப்படமான பாடி மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஹரிப்பிரியா, பிரபல KGF நடிகர் வசிஷ்ட சிம்ஹாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹரிப்பிரியா & வசிஷ்ட சிம்ஹா வெளியிட்டுள்ளனர். இருவருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இருவரும் காதலிப்பதாக ஹரி பிரியா ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் வசிஷ்ட சிம்ஹாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
Also Read | வாரிசு 'தீ தளபதி' பாடல்.. பாடி அசத்திய பாடகர் திருமூர்த்தி! அசரவைக்கும் வீடியோ