www.garudabazaar.com

இதுவரை காணாத லுக்கில் ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. 'பதான்' படத்தின் முதல் சிங்கிள் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Sharukh Khan Deepika Padukone Besharam Rang Song Video

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

Sharukh Khan Deepika Padukone Besharam Rang Song Video

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

Sharukh Khan Deepika Padukone Besharam Rang Song Video

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் Besharam Rang வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. இதுவரை காணாத லுக்கில் ஷாருக்கான் & தீபிகா படுகோனே இருவரும் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். விஷால் & சேகர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். குமார் & விஷால் தட்லானி பாடல் வரிகளை எழுதி உள்ளனர். சில்பா ராவ், விஷால், கராலிசா மோன்டெய்ரோ இந்த பாடலை பாடியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sharukh Khan Deepika Padukone Besharam Rang Song Video

People looking for online information on Deepika Padukone, Pathaan, Shahrukh Khan will find this news story useful.