www.garudabazaar.com

பிரபல முன்னணி நடிகையுடன் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் வெளியாகி உள்ளன.

Shahrukh Khan Tapsee Pannu New Movie Dunki Shooting at London

Also Read | அட.. ஐஸ்வர்யா ராயின் ‘உசுரே போகுது’ ரீகிரியேஷன் பாடலில் நடிச்ச வைரல் பெண்.. வீடியோ

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் படமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து DUNKI என்ற படத்தை தயாரிக்கின்றன.

Shahrukh Khan Tapsee Pannu New Movie Dunki Shooting at London

முன்னாபாய் MBBS,  3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல சூப்பர் மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்திய சினிமாவின் டாப் MOST WANTED இயக்குனர் ஆவார்

Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தவர். ஹிந்தியில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Shahrukh Khan Tapsee Pannu New Movie Dunki Shooting at London

2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் துவங்கியுள்ளது. இங்கிலாந்து வாழ் ஷாருக்கான் ரசிகர்கள் மூலம் இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Shahrukh Khan Tapsee Pannu New Movie Dunki Shooting at London

வாட்டர்லூ பிரிட்ஜில் ஆற்றங்கரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஷாருக்கானுக்கு அடுத்த ஆண்டு இன்னும் இரண்டு படங்கள் வரவுள்ளன. தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாமுடன் சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடித்துள்ளார், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அட்லீயின் இயக்கட்த்தில் ஜவான் படமும் ஜூன் 2ஆம் தேதி வெளிவரவுள்ளது.

Also Read | தியேட்டர் ரிலீஸ்க்கு அப்றம் தானே ஓடிடில வரும்?.. வரலாற்றை மாற்றிய சூர்யாவின் ஜெய்பீம்..

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Tapsee Pannu New Movie Dunki Shooting at London

People looking for online information on Dunki, Dunki Shooting, Shahrukh Khan, Tapsee pannu will find this news story useful.