www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்.. Throwback போட்டோவை பகிர்ந்து BIRTHDAY WISH செஞ்ச அட்லி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

Director Atlee wishes super Star Rajinikanth for Birthday

விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Director Atlee wishes super Star Rajinikanth for Birthday

இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  கபாலி படத்தின் படப்பிடிப்பில் மனைவி ப்ரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துடன் எடுத்த த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்து, "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவர் ரஜினிகாந்த் சார் லவ் யூ சார்" என டிவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Atlee wishes super Star Rajinikanth for Birthday

People looking for online information on Atlee, Rajinikanth will find this news story useful.