'தயவுசெஞ்சு சொல்லுங்க புரோ' - 'தளபதி 64' தயாரிப்பு தரப்புக்கு பிரபல நடிகர் வேண்டுகோள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 11, 2019 03:32 PM
'பிகில்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், சஞ்சீவ், ஸ்ரீநாத், அழகம் பெருமாள், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் லைன் புரொடியூசரான ஜெகதீஷிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நடிகர் சாந்தனு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'அந்த அப்டேட் தயவு செஞ்சு சொல்லுங்க புரோ, என்ன கொஞ்சம் ஃபிரீ பண்ணிவிடுங்க. அன்பு தொல்லையால் என் டைம்லைன் ஹேங் ஆகுது புள்ளீங்கோ மரண வெய்ட்டீங்கல இருக்காங்க'' என்று தெரிவித்துள்ளார்.
Happy buddaayyyyy jagguuuu bro @Jagadishbliss 🔥🔥 wishing u a fantastic year ahead 💛
Ps: Andha update eppo nnu Konjam dhayavu senju sollidunga broooo , Enna Konjam free panni vidunga😅😅 Anbu thollaiyaal en timeline hang aagudhu😅 pullingo marana waiting la irukaanga😍 pic.twitter.com/dOHzvc5QzS
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 11, 2019