ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து இந்தியன் 2 வில் இணைந்த பிரபல நடிகை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2-ம் பாகம் 22 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ளது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

Shankar approaches Rakul Preet Singh for 'Indian 2l

கடந்த ஜனவரி 18-ம் தேதி பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இந்தியன் 2-ல் விரைவில் இணைவார் என்றும் கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் உள்ளிட்ட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.