தெலுங்கு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல தமிழ் சினிமா டைரக்டர் - யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 10:45 AM
'அயன்', 'மாற்றான்' படங்களுக்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் இணைந்திருக்கும் படம் 'காப்பான்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், ''காப்பான் படத்தில் சிரிக்கி என்ற பாடலுக்கு பாபா பாஸ்கர் நடனம் அமைத்திருந்தார்.
தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதனால் அவரால் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை'' என்று தெரிவித்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடன இயக்குநராக இருக்கும் பாபா பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தை இயக்கியிருந்தார்.
We welcome our 8th contestant #BabaBhaskar to #BiggBossTelugu3 house!!! pic.twitter.com/z1Tyy4ksrA
— STAR MAA (@StarMaa) July 21, 2019