www.garudabazaar.com

எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம் அடைந்துள்ளார்.

Tamil Dialogue writer Aaroor Dass dies at 91 வசனகர்த்தா ஆரூர்தாஸ்

தமிழில் நடிகர்கள் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் தொடங்கி மொத்தம் பலநூறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ். பிரபல பழம்பெரும் பாடலாசிரியர் அமரர்  தஞ்சை இராமையாதாஸிடம் கற்றுத்தேர்ந்த இவர், தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாஸ் என்பதையும் சேர்த்து  ஆரூர்தாஸ் என்கிற புனைப் பெயருடன் திகழ்ந்தார்.

இவரது வசனத்தில் அன்னை இல்லம், கொங்கு நாட்டு தங்கம், படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும்,  தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றுள் பல எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் ஆகும். இவர் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு வடிவேலு நடித்த ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்தில் எழுத்துப் பணிகளை புரிந்தார்.

அத்துடன்  சிவாஜி கணேசன், விஜயகுமாரி நடிப்பில் வெளிந்த, ‘பெண் என்றால் பெண்’ எனும் திரைப்படத்தை ஆரூர்தாஸ் கதை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். தவிர சீரியல்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று (20, நவம்பர் 2022) மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார்.  அவருக்கு வயது 91. 

Tamil Dialogue writer Aaroor Dass dies at 91 வசனகர்த்தா ஆரூர்தாஸ்

சென்னை  தி நகர் நாதமுனி தெருவில் மாதா கேஸலில் வசித்து வந்த இவருக்கு ரவிச்சந்தர் என்கிற மகனும், தாராதேவி, உஷாதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர். மேற்படி நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது பூவுடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவு குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. 

Tamil Dialogue writer Aaroor Dass dies at 91 வசனகர்த்தா ஆரூர்தாஸ்

People looking for online information on ஆரூர்தாஸ், ஆரூர்தாஸ் காலமானார், வசனகர்த்தா will find this news story useful.