www.garudabazaar.com

பாகுபலி 2 -வின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த ஷாருக் கானின் பதான்.. மாஸ் சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதியன்று, ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 'பதான்'. ஹிந்தி மொழியில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், பான் இந்தியன் திரைப்படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருந்தது.

Shah Rukh Khan Pathaan movie highest grossing hindi film deets

Images are subject to © copyright to their respective owners

பதான் திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் வில்லனாக நடித்தார். சல்மான் கான் கேமியோ ரோலில் டைகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிளாக்பஸ்டர் ஹிட் "பதான்"

யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆனது. பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது.‌ முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners

ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்தது.  பதான் திரைப்படம் 28 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் ரிலீஸிலே அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.

ஹிந்தி வெர்ஷனில் சாதனை

இந்த நிலையில், ஹிந்தி வெர்சனில் வெளியாகி அதிக வசூல் திரைப்படங்கள் செய்த பட்டியலிலும் பதான் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இந்த இரண்டு படங்களையும் ராஜமௌலி இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

பாகுபலி 2

இரண்டு படங்களுமே தெலுங்கு மொழியை தாண்டி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதிலும், ஹிந்தி வெர்சனில் அதிக வசூல் செய்த படத்திலும் முதல் இடத்தை பாகுபலி 2 பிடித்திருந்த சூழலில், நிறைய ஹிந்தி படங்கள் வெளியாகியும் இந்த சாதனையை தகர்க்க முடியவில்லை என தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners

அப்படி இருக்கையில், ஹிந்தி வெர்ஷனில் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் தற்போது முதலிடத்தை ஷாருக் கானின் பதான் திரைப்படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முதல் இடத்தில் பதான் திரைப்படமும், இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படமும், 3 ஆவது இடத்தில் KGF 2 திரைப்படமும், 4 ஆவது இடத்தில் டங்கல் திரைப்படமும் ஹிந்தி வெர்ஷனில் அதிக வசூல் செய்த பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Pathaan movie highest grossing hindi film deets

People looking for online information on Baahubali 2, Pathaan, Prabhas, Shah Rukh Khan will find this news story useful.