www.garudabazaar.com

படுஜோராக நடந்த வரலட்சுமி Pre Birthday Celebrations.. சரத்குமார், ராதிகான்னு மொத்த குடும்பமும் இருக்காங்களே!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி. இவர் முன்னணி நடிகர் சரத் குமாரின் மகள் ஆவார்.

Varalaxmi Sarathkumar pre birthday celebrations video viral

Images are subject to © copyright to their respective owners

போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கதையின் நாயகியாகவும் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லி ஆகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தையும் தென் இந்திய சினிமாவில் பிடித்துள்ளார்.

கொன்றால் பாவம்

சமீபத்தில் வரலட்சுமி நடித்திருந்த வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, கொன்றால் பாவம், ஹனுமான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் வரலட்சுமி நடித்துள்ளார். இதில் கொன்றால் பாவம் திரைப்படம், மார்ச் 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், நடிகை வரலட்சுமியின் Pre Birthday Celebration தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. வரலட்சுமி மார்ச் 5 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

Pre Birthday Celebration

பொதுவாக வரலட்சுமி, சரத்குமார் உள்ளிட்ட யாராவது பிறந்த நாள் வரும்போது அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து அதனை மிகவும் அசத்தலாக கொண்டாடுவார்கள். அப்படி இருக்கையில், தற்போது வரலட்சுமி பிறந்தநாளுக்கு ஒரு தினம் முன்பாகவே அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இதனை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருமே இருக்கின்றனர். தனது குடும்பத்தினர்கள் முன்னிலையில், கேக் வெட்டி பிறந்தநாளை அட்வான்ஸாக வரலட்சுமி கொண்டாடி இருந்தார். அதே போல, ஏராளமான உணவு வகைகளும் இந்த கொண்டாட்டத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.

வரலட்சுமியின் Pre Birthday Celebration தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் ட்ரெண்ட் ஆகியும்  வருகிறது.

படுஜோராக நடந்த வரலட்சுமி PRE BIRTHDAY CELEBRATIONS.. சரத்குமார், ராதிகான்னு மொத்த குடும்பமும் இருக்காங்களே!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varalaxmi Sarathkumar pre birthday celebrations video viral

People looking for online information on Raadhika Sarathkumar, Sarathkumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.