www.garudabazaar.com
iTechUS

Kriti Sanon : "அதெல்லாம் முகாந்திரமில்லாத Rumours".. மீண்டும் ட்ரெண்ட் ஆகும் ஆதிபுருஷ் நடிகையின் Post.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஆதி புருஷ்.

Prabhas Adipurush Kriti Sanon Denial post trending again

இயக்குனர் ஓம் ராவத் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ராமாயணத்தை கொண்டு புனைவாக உருவாக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படும் நிலையில் இந்த திரைப்படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸூம், ஸ்ரீதேவி இடத்தில் கிருத்தி சனோன் நடித்துள்ளனர்

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானதை அடுத்து இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. மேலும் இத்திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் இன்னும் நேர்த்தியாக படம் வருவதற்காக மீண்டும் நடக்கப்படுவதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையேதான் ஆதிபுருஷ் பட நடிகர்களான பிரபாஸ், கிருத்தி சனோன் ஆகியோரின் உறவு குறித்த பல வதந்திப்பேச்சுகள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து அந்த சமயத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை மறுத்து,  தன் உறவு, காதல், திருமணம் குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என கிருத்தி சனோன் பகிர்ந்திருந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

இணையதளங்களில் கிருத்தி சனோன் பழைய பதிவு வைரலாகி வருவதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Adipurush Kriti Sanon Denial post trending again

People looking for online information on Adipurush, Kriti Sanon, Prabhas will find this news story useful.