www.garudabazaar.com

Pathaan : செம டான்ஸ் ஆடிய ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. வெளியான 'பதான்' படத்தின் 2-வது பாடல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Shah Rukh Khan Deepika Padukone Jhoome Jo Pathaan Video Song

Also Read | அனிருத் உடன் தமன்.. வைரல் PHOTO-வோட தமன் போட்ட அந்த 2 ஹேஸ்டேக்ஸ் தான் இப்போ டிரெண்டிங்!

ஷாருக்கான்,  இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

Shah Rukh Khan Deepika Padukone Jhoome Jo Pathaan Video Song

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

Shah Rukh Khan Deepika Padukone Jhoome Jo Pathaan Video Song

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் Besharam Rang வீடியோ வடிவில் வெளியானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் Jhoome Jo Pathaan பாடல் வெளியாகி உள்ளது.

Shah Rukh Khan Deepika Padukone Jhoome Jo Pathaan Video Song

இந்த பாடலில் ஷாருக்கான் 8 பேக் உடற்கட்டில் தோன்றி நடனமாடி உள்ளார்.  தீபிகா படுகோனே & ஷாருக்கான் இருவரும் இணைந்து இந்த பாடலுக்கும் நடனம் ஆடியுள்ளனர். விஷால் & சேகர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். பாடலாசிரியர் குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அர்ஜித் சிங், சுக்ரிதி காகர், விஷால் & சேகர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

 

Also Read | ரிலீசான லத்தி.. பால் அபிஷேகம், குதிரை பல்லக்கு என அமர்க்களம் செய்த விஷால் ரசிகர்கள்! VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Deepika Padukone Jhoome Jo Pathaan Video Song

People looking for online information on Deepika Padukone, Jhoome Jo song, Pathaan, Pathaan Video Song, Shah Rukh Khan will find this news story useful.