புதுப்பேட்டை மாதிரி இருக்குமா என்.ஜி.கே? சீக்ரெட் சொல்லும் செல்வராகவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா லைவ் சேட்டில் பகிர்ந்துக் கொண்டனர்.

NGK will be like Pudhupettai? Director Selvaraghavan reveals NGK Secret

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று (ஏப்.29) மாலை 7.30 மணியளவில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் ட்விட்டர் லைவ் சேட்டில் பேசினர்.

அதில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேங்க்ஸ்டர் படமான் ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தை போன்ற சில ஸ்பெஷல் காட்சிகள் இருக்கா என்ற கேள்விக்கு, அதுபோன்ற காட்சிகள் இருப்பதாக கூறினார். இப்படத்தில் 3 தீம் மியூசிக் இருப்பதாகவும், மீண்டும் யுவன் -செல்வா கூட்டணி குறித்தும் பேசினர்.

மேலும், இப்படத்தின் நாயகிகளான சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தின் கதாபாத்திரங்கள் வலுவானது என்றும், இருவரும் சிறப்பாக செய்திருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்தார். வழக்கமான தனது பாணியில் இல்லாமல் அரசியல் த்ரில்லர் எனும் புதிய ஜானரில் இப்படத்தை உருவாக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.