செல்வராகவனையே ஏமாத்திட்டாங்களே.. செமையா ப்ரான்க் பண்ண குழந்தைகள்.. ஜாலி வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் செல்வராகவனுக்கு அதிர்ச்சி கொடுத்த அவரது குழந்தைகளின் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக கருதப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்படுகிறது. இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் என்.ஜி.கே. படத்தை இயக்கினார். மேலும் தனது அடுத்தப்படுத்துக்கு திரைக்கதை எழுதும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் சேர்ந்து, லைட்டில் பூச்சி இருப்பது போல செட் செய்துவிட்டு, செல்வராகவனை அழைக்க, அவர் அதை நிஜ பூச்சி என பயப்பட, அவரை செமையாக ப்ரான்க் செய்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் கீதாஞ்சலி. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
@gitanjaliselvaraghavan pranking appa ##selvaragavan 🤣🤣🤣🤣
♬ original sound - gitanjaliselvaraghavan