ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 - செல்வாவின் ப்ளான் இதுதான் - ஜி.வி.பிரகாஷ் சொல்கிறார்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பலர் அறியாத விஷயங்களை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். 

ஆயிரத்தில் ஒருவன்-2 பற்றி பேசிய ஜி.வி.பிரகாஷ் | gv prakash opens about selvaraghavan karthi's ayirathil oruvan and part-2

2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்தார். பத்து வருடங்களை கடந்தும், ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக காத்து கிடக்கின்றனர். 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஆயிரத்தில் ஒருவன்-2 பற்றி கேட்டதற்கு, 'முதலில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இரண்டு பாகங்களாகவே எடுக்க நினைத்தார். முதல் பாதி ஒரு பாகம், இரண்டாம் பாதி ஒரு பாகம் என ப்ளான் செய்தார். அப்படி செய்திருந்தால் 3 அல்லது 4 பாகங்கள் வரை எடுத்திருக்கலாம். அந்த நேரத்தில் செல்வராகவனுக்கு சரியான அங்கிகாரம் கிடைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor