www.garudabazaar.com

மோகன்.ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ படத்துல செல்வராகவன் கேரக்டர் இதுதான்.! வெளியான டீசர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. இவர் அடுத்ததாக ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படம் ‘பகாசூரன்’.

Mohan G direction Bakasuran teaser Selvaraghavan character

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.  ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

‘பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி பேசும்போது,  “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதைக் களமும் அப்படிதான் அமைந்துள்ளது.  கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும்.

படத்திற்கு  ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசர்படி, பெண்களை கடத்தி கொலை செய்யும் கொடூரமான வில்லனாக காட்சிப்படுத்தப்படுகிறார் இயக்குநர் செல்வராகவன். இந்த குற்றங்களை விசாரிக்கும் அதிகாரியாக நட்டி நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்த செல்வராகவன் பற்றி பேசிய மோகன்.ஜி, “பகாசூரன் படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை.. சின்ன கருத்து கேட்டால் கூட, ‘உங்க முடிவே இறுதியானது’ என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார். ‘பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் சார் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G direction Bakasuran teaser Selvaraghavan character

People looking for online information on Bakasuran, Bakasuran Teaser, Mohan g, Selvaraghavan will find this news story useful.