Senthamaraiye : என்னா ரொமான்ஸ்.!!. பிக்பாஸ் அமீர் & பாவனி முதல்முறை சேர்ந்து நடித்த ஆல்பம்..!!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி.
Also Read | Bonda Mani : "உதவி செய்யுங்க..!..".. ICU-வில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி - கதறி அழுத சக நடிகர்.!
விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது பாவனியிடம் அமீர் பல முறை ப்ரொபோஸ் செய்தார், அப்படி ஒருமுறை, “ஐ எம் மேட்லி.. டீப்ளி இன் லவ் வித் யூ.” என்கிறார். அதற்கு பாவனியோ, “சீரியஸ்லி.. ஐ டோன் ஹேவ் எனி ஃபீலிங் ஆன் யு” என்கிறார். பின்னர் அமீர், “உனக்கு என்னை பிடிக்குமா?” என அமீர் கேட்க, “உன்ன ஃப்ரண்டா பிடிக்கும்.. ஆனா நீ சீரியஸா பேசுற.. என் பின்னாடி வந்தீன்னா ஒரு நாளைக்கு உனக்கே தெரியும்.” என்று சொல்ல, “நான் சீரியஸா சொன்னேன்னு யாரு சொன்னா?” என அமீர் சொல்கிறார். இப்படியான வகையில் இவர்களது உறவு க்யூட்டாக தொடங்கியது.
இப்படி பாவனியிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர். அதிலும் இருவருக்கும் திருமணமாக கூடிய காட்சிகள் இடம் பெறுகின்றன. அதன்படி தாலி கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது, தலையில் அப்பளம் உடைப்பது, அட்சதை போட்டுக் கொள்வது உள்ளிட்ட காட்சிகள் இவர்கள் இருவருக்குமான காட்சிகளாக இடம் பெற்றன.
பின்னர் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசன் வின்னர் ஆகினர். அதன் பிறகுதான் அமீர் குறித்து பதிவிட்ட பாவனி, அந்த பதிவில் தம் காதலையும் சொல்லி இருந்தார். அதில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் முதன் முதலில் செந்தாமரையே எனும் ஆல்பம் பாடலில் முதன் முதலில் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் ஃபோட்டோகிராபராக வரும் இஸ்லாமியரான அமீர், கொஞ்சம் கொஞ்சமாக இந்து பெண்ணான பாவனியை புகைப்படம் எடுத்துக்கொண்டே வருகிறார். பின்னர் இருவருக்கும் காதல் மலர, இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனர். இறுதியில் இந்து பெண்ணான பாவனியை, இஸ்லாமியரான அமீர் குடும்பத்தார், சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் செய்யும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்த ‘செந்தாமரையே’ வீடியோ இசை ஆல்பம் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
Also Read | Kate Winslet : ஷூட்டிங்கில் காயம்.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நம்ம ‘டைட்டானிக்’ ரோஸ்..?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Raju Teaches Tamil Ranbir Kapoor Viral Reactions BB Jodigal 2
- Pavani Love Proposal To Amir After Winning BB Jodigal 2
- Brahmastra Nagarjuna SS Rajamouli Ranbir Kapoor In BB Jodigal 2
- Pavani Becomes Lady Amir BB Jodigal 2 New Promo
- Bigg Boss Pavani Reveals Amir Got Injury Bb Jodigal 2
- Pavani Opens Up On Amir Anger BB Jodigal 2
- BB Jodigal 2 Amir Pavani Marriage New Promo Viral
- Thamaraiselvi Parthasarathi Wedding Moments BB Jodigal 2
- BB Jodigal 2 Raju Jayamohan Viral Female Get Up
- Bb Jodigal 2 Man Behind Viral Aluminum Pithala Song
- Bigg Boss Amir Proposes Pavani During Dance BB Jodigal 2
- Bigg Boss Amir Pavani Cute Reaction BB Jodigal 2 New Promo
தொடர்புடைய இணைப்புகள்
- BIGG BOSS 6-ல் Bharathi Kannamma புகழ் Roshini?😍 Army ஆரம்பிக்கலாங்களா?
- BIGGBOSS 6-ல இந்த HANDSOME GUY-ஆ? கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
- BIGG BOSS 6-க்கு வருகிறாரா Rakshan? 😍 சபாஷ் சரியான போட்டி | Vijay Tv | Kamal Haasan
- BIGG BOSS 6-ல் கலந்து கொள்ளும் Famous YOUTUBER? 🔥 அசத்தலான ஆரம்பமா இருக்கே
- BIGGBOSS 6 LAUNCH DATE ANNOUNCED? 🔥🔥 வேட்டைக்கு தயாராகும் Kamal Haasan | Vijay Tv
- BIGG BOSS 6-க்கு வருகிறாரா இந்த பிரபல பெண் VJ? அட்ரா சக்க!! கச்சேரி களை கட்டப்போகுது
- "AMIR, நீ எனக்கு Dance Partner-ஆ கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கணும்.." 🥺 PAVNI Emotional
- "Coffee Shop-க்கு கூப்பிட்டாங்க.. Income Tax என்கிட்ட கேட்கும்போது தான் அதிர்ச்சியா இருந்துச்சு.."
- PAVNI Kiss கொடுத்துட்டா😘 துள்ளி குதிச்சு குஷியான AMIR..அறைந்த PAVNI
- PAVNI KISS கொடுத்த உடனே, AMIR-அ கைலியே பிடிக்கமுடியல😘
- "சீக்கிரம் எழுந்துவா PAVNI.." Pavni-க்கு என்னாச்சு ? Emotional ஆன AMIR 🥺
- "போன ஜென்மத்துல பாம்பா பொறந்துருப்பா போல.." 🤣 காதலியை கிண்டல் பண்ண Mugen Rao..