www.garudabazaar.com

திரௌபதி -2 எப்போ?.. பகாசூரன் அப்டேட் .. அடுத்த படம் எது? மோகன் ஜி கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன்.

Mohan G about his next film and Bakasuran Draupathi 2

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா வரை தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட்  படங்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை  முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. கடந்த ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும்  முடிவடைந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் டீஸரும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த படத்தை நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது "பகாசுரன் பாடல்கள் அடுத்த வாரம் வரும் என்றும் திரௌபதி பார்ட் 2 வரும் என்றும் அடுத்த கதையும் உண்மை கதையே கமர்சியலாக எடுப்பேன் என்றும் மோகன் ஜி கூறியுள்ளார்.

Tags : Mohan g

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G about his next film and Bakasuran Draupathi 2

People looking for online information on Mohan g will find this news story useful.