IRAVIN NIZHAL
www.garudabazaar.com

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம்.. BTS போட்டோவுடன் வெளியான தீ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Mohan G Selvaraghavan New Movie Shooting Update From Natty Natraj

Also Read | 'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் அசத்திய மிருணாளினி.. மாடர்ன் உடையில் செம போட்டோஷூட்!

தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.  அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகராக பிஸியாக இருந்தாலும்  தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்வடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்குகிறார்.

Mohan G Selvaraghavan New Movie Shooting Update From Natty Natraj

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சிலநாட்களுக்கு முன் சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது.  பின்னர் இப்படத்துக்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டது.

பகாசூரன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கனின் கதாபாத்திரமாகும். இந்நிலையில் மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி இணைந்து நடித்து வரும் பகாசூரன் படத்தில் நேற்றோடு தனது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப் பட்டதாகவும், இயக்குனர் மோகன் G, மற்றும் செல்வராகவன் உட்பட பணியாற்றிய  அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் நட்ராஜ்.

Mohan G Selvaraghavan New Movie Shooting Update From Natty Natraj

அந்த ட்வீட்டில் "பகாசுரன் படப்பிடிப்பு இன்றுடன் என்னுடய  பங்கு நிறைவடைந்தது…இயக்குனர் மோகன் ஜீ, செல்வராகவன் அவர்கள்,பாரூக் ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

Also Read | கார்த்தி நடிக்கும் "சர்தார்".. கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! முழு விபரம்

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G Selvaraghavan New Movie Shooting Update From Natty Natraj

People looking for online information on Mohan g, Natty Natraj, Selvaraghavan, Selvaraghavan New Movie, Selvaraghavan New Movie Shooting Update will find this news story useful.