Pattamboochi

“தனுஷ்தான் இவர்கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டார்…” செல்வராகவனின் சீக்ரெட்ஸ் பகிர்ந்த சகோதரிகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் behindwoods-ல் அளித்த நேர்காணல் இப்போது வைரலாகிவருகிறது.

Director selvaraghavan exclusive interviews with sisters

இயக்குனர் செல்வராகவன்

தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன்  ‘காதல் கொண்டேன்’, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதையடுத்து சமீபத்தில் அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகராக பிஸியாக இருந்தாலும்  தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்வடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Director selvaraghavan exclusive interviews with sisters

நடிகர் செல்வராகவன்

பீஸ்ட், சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்  அதிகாரப்பூர்வமாக இப் படத்துக்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலு முடிந்துவிட்ட நிலையில் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Director selvaraghavan exclusive interviews with sisters

சகோதரிகள் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் நமது behindwoods சேனலுக்காக பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணலில் அவரின் இரு சகோதரிகள் கலந்துகொண்டு அவரைப் பற்றி குழந்தைப் பருவ கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அப்படி பேசும்போது “சின்னவயதில் நாங்கள் எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்கவேண்டும். நாங்களாவது எப்போதாவது எதிர்த்து பேசுவோம். ஆனால் அதிகமாக கஷ்டப்பட்டது தனுஷ்தான். இவர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வார். இவருக்கு திண்பண்டங்கள் வாங்க சைக்கிளில் கடைக்கெல்லாம் செல்வார். ஆனாலும் வாங்கிவரும் பொருளில் அவருக்கு கொஞ்சம்தான் இவர் கொடுப்பார். உண்மையிலேயே தனுஷ்தான் இவரிடம் கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறி இருக்கிறார்.” என ஜாலியாக பேசியுள்ளனர். இந்த நேர்காணலில் செல்வராகவனைப் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

“தனுஷ்தான் இவர்கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டார்…” செல்வராகவனின் சீக்ரெட்ஸ் பகிர்ந்த சகோதரிகள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director selvaraghavan exclusive interviews with sisters

People looking for online information on Dhanush, Selvaraghavan will find this news story useful.