www.garudabazaar.com

சீமான் ஹீரோவாக நடிக்கும் புதுப்படம்!.. இன்னொரு ஹீரோவாக பிரபல தயாரிப்பாளர் & நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்கும் திரைப்படம் அமீரா. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

seeman RK Suresh starring Ameera சீமான் ஆர்.கே.சுரேஷ் அமீரா

இயக்குநர் சீமான் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  தொடர்ந்து மாதவன் நடிப்பில் ‘தம்பி’ எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இதேபோல் ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே ‘நாம் தமிழர் கட்சி’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இயங்கி வரும் சீமான், தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டி வருவதுண்டு.

seeman RK Suresh starring Ameera சீமான் ஆர்.கே.சுரேஷ் அமீரா

இந்த நிலையில்தான் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இணைந்து ‘அமீரா’ எனும் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, வினோதினி, கூத்துப்பட்டறை ஜெயக்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன், இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ‘தம்பி’ திரைக்களம் தயாரித்துள்ளது.

மலையாள நடிகை அனு சித்தாரா இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அனு சித்தாரா கேரள நடிகர்கள் மம்மூட்டி, திலீப் ஆகியோருடன் ஜோடியாக மலையாளப் படங்களில் நடித்தவர்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர் செழியன், ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘டுலெட்’ படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் என்பது குறிப்பிடத் தக்கது.  

Also Read: ஊரையே நடுங்க வைத்த இந்த Game-ஓட டைட்டில்ல படமா? போலீஸாக மிரட்டும் பூர்ணா!

தொடர்புடைய இணைப்புகள்

seeman RK Suresh starring Ameera சீமான் ஆர்.கே.சுரேஷ் அமீரா

People looking for online information on RK Suresh, Seeman will find this news story useful.