www.garudabazaar.com

VIDEO: விஜய் கூட கடைசி மீட்டிங் எப்போ? இயக்குனர் சிம்புதேவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிம்பு தேவன் "கசடதபற" என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை ஆகஸ்ட் 27 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

video director chimbudevan about actor vijay

இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஐயர், ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன்,  ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

video director chimbudevan about actor vijay

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் சிம்புதேவன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் 50 கேள்விகளுக்கு சரசரவென பதில் அளித்துள்ளார். அதில் வடிவேலு, ஷங்கர், விஜய், சேரன், வெங்கட்பிரபு ஆகியோரை பற்றி பேசியுள்ளார். 

video director chimbudevan about actor vijay

குறிப்பாக விஜய் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதில் விஜய்யின் முடிவெடுக்கும் திறனை கண்டு ரசித்ததாக கூறியுள்ளார். விஜய் கூட கடைசி மீட்டிங் எப்போ என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். முழு பேட்டியின் வீடியோ கீழே கோடுக்கப்பட்டுள்ளது.

video director chimbudevan about actor vijay

வி. ராஜலட்சுமியின் பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, பிரபல வினியோகஸ்தர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து "கசடதபற" படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்  சிஎஸ், பிரேம் ஜி அமரன் மற்றும் ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேர் இசையமைத்திருக்கிறார்கள். 

மேலும் எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

VIDEO: விஜய் கூட கடைசி மீட்டிங் எப்போ? இயக்குனர் சிம்புதேவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

video director chimbudevan about actor vijay

People looking for online information on Chimbu Deven, Kasada Tabara, Puli, Vijay will find this news story useful.