Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சி!! சீமான் குடும்பத்தில் பெரும் சோகம்!.. 'மாநாடு' பட தயாரிப்பாளர் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.

Seeman Father Senthamizhan passes away producer condolence

இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து நாம் தமிழர் எனும் அரசியல் இயக்க ஒருங்கிணைப்பாளராக வளர்ந்தவர் சீமான். தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியாகவும் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக திகழும் சீமானின் தந்தை தான் செந்தமிழன்.

செந்தமிழன் அவர்கள் தான் தற்போது சிவகங்கை மாவட்டம் அரணையூரில் காலமாகியிருக்கும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு நாம் தமிழர் கட்சி தலைமை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து பலரும் சீமானின் தந்தை இறப்புக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ள சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “அண்ணனின் அன்னையாய் வாழ்ந்த தந்தையை இழந்துவிட்டோம் மிகுந்த வருத்தமளிக்கிறது.தந்தை தாயின் மீது மிகுந்த அன்பும் நேசமும் மரியாதையுமுள்ளவர் அண்ணன் சீமான். பெயந்துயர நிகழ்வை சந்தித்திருக்கும் அண்ணனுக்கு வார்த்தையால் ஆறுதல் சொல்லி மாளாது. 

தந்தையின் ஆன்மா செந்தமிழாய் முருக பாதத்தில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: “தடுப்பூசி போட்டுக்கொண்டார் தலைவர்!!”.. ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட வைரல் புகைப்படம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Seeman Father Senthamizhan passes away producer condolence

People looking for online information on Maanaadu, Seeman, Suresh Kamatchi will find this news story useful.