"லிங்குசாமி மீது சீமான் புகார்!".. எழுத்தாளர்கள் சங்க சார்பில் கே.பாக்யராஜ் பரபரப்பு விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநராக இருந்து அரசியல் இயக்கம் தொடங்கி தற்போது நாம் தமிழர் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இயங்கி வருகிறார் சீமான்.

K.Bhagyaraj behalf of SIFWA over Lingusamy and Seeman dispute

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திடம் அவர் அளித்துள்ள புகாருக்கு, எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “வணக்கம். நீங்கள் நமது சங்கத்தில் பதிவு செய்துள்ள உங்களது ‘பகலவன்’ கதை சம்மந்தமாக ஒரு புகார் கடிதம் 28 .04.2021 தேதியன்று சங்கத்தில் அளித்தீர்கள். உடனே சங்கத்தின் அனைத்து புகார் குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் தாங்கள் யார் மீது புகார் தந்தீர்களோ அந்த உறுப்பினர் திரு.லிங்குசாமி அவர்களுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு லிங்குசாமி அவர்கள் உடனே சங்கத்தின் மேலாளரிடம் தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த உங்களது இதே  ‘பகலவன்’ கதை புகார், சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பே தங்களால் ஒரு முறை கொடுக்கப்பட்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் திரு.விக்ரமன், திரு.ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரால் விசாரிக்கப்பட்டு சமரசமும் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

                                                              (2013 - சமசர கடித நகல்)

17.10.2013 அன்று நடந்த அந்த சமரச தீர்வின் கடித நகலையும் எங்களுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த தீர்ப்பு நகலை சங்கத்தின் புகார் குழுவினர் அனைவரும் படித்தோம். அந்த சமரச தீர்வு கடித நகல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மேற்படி கடித ஒப்பந்தப்படி நீங்களும், லிங்குசாமி ஆகிய இருவரும் கையொப்பம் இட்டுள்ளீர்கள்.

K.Bhagyaraj behalf of SIFWA over Lingusamy and Seeman dispute

சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் அவர்களும், பொதுச் செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களும் என இருவரும் சாட்சி கையப்பமிட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமரச ஒப்பந்தத்தை படித்த சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் திரு.லிங்குசாமி அவர்கள் ஒப்பந்த நிபந்தனைகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே நீங்கள் உறுப்பினர் திரு.லிங்குசாமி அவர்கள் மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு எங்கள் சங்கத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்கள் அனைவரும் ஏகமனதாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: பிரபல 'சீரியல்' நடிகர், 'பட்டிமன்ற' பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

தொடர்புடைய இணைப்புகள்

K.Bhagyaraj behalf of SIFWA over Lingusamy and Seeman dispute

People looking for online information on K.Bhagyaraj, Lingusamy, Seeman, SIFWA will find this news story useful.