Reliable Software
www.garudabazaar.com

சீமான் குடும்பத்தில் பெரும் சோகம்!.. "என் பிள்ளையை பெற்றெடுத்த"...பாரதிராஜா இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். 

Director Bharathiraja emotional condolence Seeman father demise

செந்தமிழன் சீமான் என சீமானை அழைப்பதற்கான முக்கிய காரணம் அவரது தந்தையின் பெயர் செந்தமிழன் என்பதுதான் என்பது பலரும் அறியாதது. இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் சீமானின் தந்தை காலமான செய்தியை நாம் தமிழர் கட்சித் தலைமை தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பலரும் சீமானின் தந்தையின் மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இயக்குநரும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், "என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,

நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்." என சீமானின் தந்தை மறைவு குறித்து உருக்கமான இரங்கல் அறிவிப்பை தெரிவித்துள்ளார். 

ALSO READ: அதிர்ச்சி!! சீமான் குடும்பத்தில் நடந்த பெரும் சோகம்!.. 'மாநாடு' பட தயாரிப்பாளர் உருக்கமான பதிவு!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Bharathiraja emotional condolence Seeman father demise

People looking for online information on Bharathiraja, Seeman will find this news story useful.