"வில்லன் நடிகர் மோசடியா?"... "அது பொய்யான புகார்"!.. கொந்தளித்த RK சுரேஷ்... ‘பரபரப்பு’ விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர், சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

Producer actor RK Suresh explains over allegations on him

இது சம்மந்தமாக, விளக்கம் அளிப்பதற்கும் தம் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே .சுரேஷ் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு தம் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் , “நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என் மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார். நான் இந்த சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராக பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன். நான் விற்றேன், இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம்.

நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்? அதில் ஏன் நான் மோசடி செய்ய வேண்டும்? இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்? எனக்கு பணம் வேண்டும் என்றால், என் வீட்டை நானே அடகுவைத்து நானே பெற்றுக்கொள்ள மாட்டேனா?

ஆக, என் மீதான இந்த பொய்ப்புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமான எனது விளக்கத்தையும், என் தரப்பு ஆவணங்களையும், ஆதாரங்களையும் ஆணையர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையர் அவர்கள் கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

பாலாவின் இயக்கத்திலான ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ், பின்னர் தர்மதுரை திரைப்படத்தை தயாரித்தார். தற்போது பாலாவின் தயாரிப்பில் உருவாகும் ‘விசித்திரன்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். 

"வில்லன் நடிகர் மோசடியா?"... "அது பொய்யான புகார்"!.. கொந்தளித்த RK சுரேஷ்... ‘பரபரப்பு’ விளக்கம்! வீடியோ

Tags : RK Suresh

Producer actor RK Suresh explains over allegations on him

People looking for online information on RK Suresh will find this news story useful.