www.garudabazaar.com

SARDAR: முதல் வாரத்தை விட 2வது வாரத்தில் அதிக தியேட்டர்கள்.. செம மாஸ் காட்டும் 'சர்தார்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Karthi Sardar Movie 2nd Week Tamilnadu Theatre Count

Also Read | PS1: OTT-யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' .. எப்போ? எதுல?

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Karthi Sardar Movie 2nd Week Tamilnadu Theatre Count

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Karthi Sardar Movie 2nd Week Tamilnadu Theatre Count

சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Karthi Sardar Movie 2nd Week Tamilnadu Theatre Count

இந்நிலையில் இந்த படம் இரண்டாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதல் வாரத்தில் 380 திரைகளில் வெளியான இந்த படம், இரண்டாவது வாரத்தில் 500 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

Also Read | Doll Task : அசீம் - விக்ரமன் விஷயத்தில் Bigg Boss எடுத்த முடிவு?.. அடுத்தது என்ன??

Tags : Karthi, Sardar

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Sardar Movie 2nd Week Tamilnadu Theatre Count

People looking for online information on Karthi, Sardar will find this news story useful.