www.garudabazaar.com

PS1: OTT-யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' .. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன்-1 படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Ponniyin Selvan OTT Release on Amazon Prime Video

Also Read | தனலட்சுமிக்காக விக்ரமன்... ஷெரினாவுக்காக மகேஸ்வரி.. அனல் பறந்த வாதம்.. என்ன நடந்தது..?

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Ponniyin Selvan OTT Release on Amazon Prime Video

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

Ponniyin Selvan OTT Release on Amazon Prime Video

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan OTT Release on Amazon Prime Video

அனைத்து ரசிகர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் 199 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது. மேலும் அனைத்து பிரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் பொன்னியின் செல்வன் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "யாரோ என்ன தள்ளி விட்டாங்க, ஆனா".. தனலட்சுமி விவகாரத்தில் முதல்முறை உடைக்கும் ஷெரினா

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan OTT Release on Amazon Prime Video

People looking for online information on Amazon Prime Video, Ponniyin Selvan 1, Ponniyin Selvan OTT Release Updates, PS 1 will find this news story useful.