www.garudabazaar.com

பேட்டி நடுவே VIDEO CALL.. பிக்பாஸ் GP முத்துவிடம் நடிகர் சசிகுமார் வெச்ச கோரிக்கை..! Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானார்.  பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துள்ள இயக்குநர் சசிகுமார், பல ஹிட் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பிலல் 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் கடந்த நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

Sasikumar requesto GP Muthu in LIVE Video Call Exclusive

Also Read | Baba : ரஜினிகாந்த் நடித்த பாபா பட டிஜிட்டல் ரீ ரிலீஸ் தேதி இதுதானா? - தெறிக்கும் அப்டேட்..

சசிகுமாருடன் ஹரிப்ரியா, விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குறித்து பேசிய சசிகுமார், “எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என கூறியிருந்தார்.

Sasikumar requesto GP Muthu in LIVE Video Call Exclusive

இதேபோல் சசிகுமார் நடிப்பில் நவம்பர் 25-ஆம் தேதி காரி எனும் திரைப்படம் வெளியாகிறது. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஹேமந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். 

Sasikumar requesto GP Muthu in LIVE Video Call Exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்த இயக்குநர் சசிகுமார், இந்த பேட்டி நடுவே, ஜிபி முத்துவுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். பிரபல யூடியூபராகவும், முன்னாள் டிக்டாக் பிரபலமாகவும் ஜிபி முத்துவின் பேச்சுகள், ஆக்டிவிட்டி குறிப்பாக தமக்கே உரிய வட்டார வழக்கு மொழியில் அவர் படிக்கும் லெட்டர் உள்ளிட்டவை ஜிபி முத்து இந்த ட்ரெண்டிங் உலகில் இணைய காரணமாக அமைந்தது. தற்போது சன்னி லியோன் நடிப்பிலான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில் பிக்பாஸ் சீசன் 6-ல் இருந்த ஜிபி முத்து பின்பு மகன் நினைவால் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் அவருடன் வீடியோ காலில் உரையாடிய இயக்குநர் சசிகுமார், ஏன் பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்டீர்கள்.? என கேட்க, அதற்கு ஜிபி முத்துவோ, “அதான் மகனுக்காக வெளியேறினேன்” என சொல்ல, அப்போது பேசிய சசிகுமார், “இப்போது வீட்டில் அனைவரும் நலமா? பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல உங்கள் கையில் ஒரு சேனல், சோசியல் மீடியோ உள்ளதால் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்கள் மூலம் பேசப்படும் கருத்துக்கள் பலரை சென்றடைகிறது. எனவே அதில் பாசிடிவான நிறைய விஷயங்களை சொல்லுங்கள். மற்ற எதிர்மறை விஷயங்களை கவனமாக தவிர்க்க வேண்டும் நீங்கள்” என கோரிக்கை வைப்பதாக குறிப்பிட்டார்.

Sasikumar requesto GP Muthu in LIVE Video Call Exclusive

அப்போது ஜிபி முத்து , “இதை நான் ஏற்கிறேன். நிச்சயம் அதை செய்கிறேன். அதே போல் நான் பேசுவது வட்டார வழக்கு பேச்சு. அதில் வரக்கூடிய வார்த்தைகளை நீங்கள் சொல்லவில்லையே?” என கேட்க,  அதற்கு சசிகுமாரோ, “நான் அந்த வட்டார பேச்சை சொல்லவில்லை. உங்கள் கருத்தையும் சொல்லப்படும் விதத்தையும் பாசிடிவாக சொன்னால் அது நிச்சயம் பரவும். அந்த பொறுப்பை நினைவில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவ்வளவே” என பேசினார். சசிகுமார் பகிர்ந்த நிறைய விஷயங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

Also Read | Sivaangi : 1 மில்லியன் வியூவ்ஸை தாண்டி பட்டையை கிளப்பும் சிவாங்கயின் 1 நிமிட Song ‘தீவானா’..!

பேட்டி நடுவே VIDEO CALL.. பிக்பாஸ் GP முத்துவிடம் நடிகர் சசிகுமார் வெச்ச கோரிக்கை..! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar requesto GP Muthu in LIVE Video Call Exclusive

People looking for online information on Bigg boss, GP MUTHU, Kaari, Naan Mirugamaai Maara, Sasikumar will find this news story useful.