www.garudabazaar.com

Sivaangi : 1 மில்லியன் வியூவ்ஸை தாண்டி பட்டையை கிளப்பும் சிவாங்கயின் 1 நிமிட Song ‘தீவானா’..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட்டாக 1 மினிட் மியூசிக் இருந்துவருகிறது. அதன்படி '#1MinMusic' என்கிற ஹேஷ்டேகில் ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இந்த ஃபோரம் இணைந்துள்ளது.

Sivaangi 1 Min Music Album Deewana crossed 1 Million views

Also Read | "உன் திமிர என்கிட்ட காட்டாத".. Cooking நேரத்தில் மாறி மாறி மோதிக்கிட்ட ஜனனி, தனா!!

ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பே இந்த  ‘#1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இதன் ஒரு அங்கமாக இன்ஸ்டாகிராம், தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.

Sivaangi 1 Min Music Album Deewana crossed 1 Million views

அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய  'தீவானா'  என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sivaangi 1 Min Music Album Deewana crossed 1 Million views

இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.

Sivaangi 1 Min Music Album Deewana crossed 1 Million views

 

Also Read | Baba : ரஜினிகாந்த் நடித்த பாபா பட டிஜிட்டல் ரீ ரிலீஸ் தேதி இதுதானா? - தெறிக்கும் அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi 1 Min Music Album Deewana crossed 1 Million views

People looking for online information on Deewana, Sivaangi will find this news story useful.