www.garudabazaar.com

"நான் அப்படி சொல்லவே இல்ல.. ஆனா நீங்க..".. ஜனனி - விக்ரமன் இடையே நடந்த வாக்குவாதம்.. Biggboss6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss6 Argument Between Janany and Vikraman about Court Task

Also Read | "எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. வெளியே போய்டணும்".. திரும்பவும் புலம்பிய தனலட்சுமி..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

BiggBoss6 Argument Between Janany and Vikraman about Court Task

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss6 Argument Between Janany and Vikraman about Court Task

இந்நிலையில், விக்ரமன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜனனி. இந்த வழக்கில் விக்ரமனுக்காக குயின்சியும், ஜனனிக்காக அசீமும் வாதாடுகிறார்கள். மணிகண்டா நீதிபதியாக செயல்படுகிறார். அரண்மனை டாஸ்க்கின் போது, தன்னிடம் மொழி குறித்து விக்ரமன் பேசியதை குறிப்பிட்டு ஜனனி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், கிட்சன் பகுதியில் நிற்கும் ஜனனி, விக்ரமனை அழைத்து,"விக்ரமன் விளையாட்டை சீரியஸாக எடுக்காதீங்க" என்கிறார். அப்போது,"அந்த விஷயத்தை இலங்கை, அப்டி இப்டினு மாத்திட்டிங்க" என விக்ரமன் சொல்ல, இலங்கை பற்றியெல்லாம் தான் குறிப்பிடவில்லை என்கிறார் ஜனனி.

BiggBoss6 Argument Between Janany and Vikraman about Court Task

தொடர்ந்து பேசும் விக்ரமன், "தமிழ் பேசுவது சிரமமா இருந்ததா? என்று தான் கேட்டேன். உண்மையா நான் அதைப்பற்றி பேசவே இல்லை" என்றபடி நடந்து செல்கிறார். இப்படி பரபரப்பான வாதங்களோடு நகர்கிறது அந்த ப்ரோமோ வீடியோ.

Also Read | ஜனனி - விக்ரமன் வழக்கில் அசீமின் பரபர வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss6 Argument Between Janany and Vikraman about Court Task

People looking for online information on Bigg Boss 6 Court Task, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janany, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.