BREAKING: கார்த்தி பிறந்தநாளில் ‘சர்தார்’ படத்தின் அடுத்த அப்டேட்…? வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

sardhar movie second reportedly will release on karthi birthday

Also Read | ஒன்றரை மணிநேர Deadline… இதயத்தோடு பயணிக்கும் மருத்துவக்குழு… பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பு!

கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள்…

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

sardhar movie second reportedly will release on karthi birthday

சர்தார் ஷூட்டிங்…

தற்போது கார்த்தி, சர்தார் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி இருந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சர்தார் படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சர்தார் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

sardhar movie second reportedly will release on karthi birthday

சர்தார் அப்டேட்….

இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாள் வருவதை அடுத்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியான முதல் லுக் போஸ்டரில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டு, கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: கார்த்தி பிறந்தநாளில் ‘சர்தார்’ படத்தின் அடுத்த அப்டேட்…? வெளியான தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sardhar movie second reportedly will release on karthi birthday

People looking for online information on Karthi, Karthi Birthday, Karthi Shardhar Movie, Sardhar Movie, Sardhar Movie Updates will find this news story useful.