Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"சர்தார்" படத்தின் புதிய போஸ்டர்... வயதான கார்த்தி லுக் சும்மா மிரட்டுதே! பக்கா மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் புதிய போஸ்டர் திரையரங்குகளில் விளம்பர பலகைகளாக வைக்கப்பட்டுள்ளன.

Sardar Movie New Posters in Cinemas Theatre Hoardings

Also Read | KGF புகழ் பிரசாந்த் நீல்லின் 20 ஆண்டு கால கனவுப்படம்.."NTR 31" படத்தின் மாஸ் அப்டேட்!

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விருமன்'. இந்த விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன.

Sardar Movie New Posters in Cinemas Theatre Hoardings

இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்று ரிலீஸ் ஆகின்றது. 'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sardar Movie New Posters in Cinemas Theatre Hoardings

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சர்தார் படத்தின் புதிய போஸ்டர்கள் திரையரங்குகளில் விளம்பர பலகைகளாகவும் பதாகைகளாகவும் வைக்கப்பட்டுள்ளன.‌

Sardar Movie New Posters in Cinemas Theatre Hoardings

சென்னை சத்யம் திரையரங்கில் பெரிய பதாகை விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.‌இந்த போஸ்டர்களில் வயதான கார்த்தியின் முழு தோற்றமும் தெரியும்படி போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான போஸ்டர்களில் வலது புற முகம் மட்டும் தெரியும் வண்ணம் இருந்தது.

Also Read | அம்மாடியோ! KGF இயக்குனர் & பிரபாஸ் இணையும் "சலார்".. படத்தோட பட்ஜெட் இம்புட்டு கோடியா? மாஸ் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Movie New Posters in Cinemas Theatre Hoardings

People looking for online information on Karthi, Sardar movie, Sardar Movie New Posters will find this news story useful.