Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"விருமன்" படத்தின் FDFS.. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் படம் பார்த்த கார்த்தி! செம வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

Karthi watched Viruman Movie at Rohini Silver Screen

Also Read | 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தமிழகம் முழுவதும் காலை 6:30 மணி முதல் முதல் காட்சி திரையிடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆராவாரத்துடன் முதல் காட்சி திரையிடப்பட்டது.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் கார்த்தி மற்றும் விருமன் படக்குழு & திரை பிரபலங்கள் விருமன் படத்தை பார்த்தனர். பால்கனியில் அமர்ந்து ரசிகர்கள் விசில் சத்தத்துக்கு மத்தியில் கார்த்தி படம் பார்த்தார். மேலும் முன் வரிசையில் அமர்ந்து இருந்த ரசிகர்களிடம் கைக்குலுக்கினார்.

Karthi watched Viruman Movie at Rohini Silver Screen

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

Karthi watched Viruman Movie at Rohini Silver Screen

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Karthi watched Viruman Movie at Rohini Silver Screen

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

Also Read | ரசிகர்களுடன் சேர்ந்து 'விருமன்' படம் பார்த்த விஜய் மனைவி சங்கீதா.. வைரல் வீடியோ!

 

"விருமன்" படத்தின் FDFS.. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் படம் பார்த்த கார்த்தி! செம வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi watched Viruman Movie at Rohini Silver Screen

People looking for online information on Aditi Shankar, Karthi, Rohini Silver Screen, Viruman Movie will find this news story useful.