Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

PS 1 : "‘நந்தினி’ ஐஸ்வர்யா ராயுடன் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமா?".. 'பெரிய பழுவேட்டரையர்' சரத்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Sarathkumar Over love scens with aishwarya rai Ponniyin Selvan

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயுடன், காதல் காட்சிகளில் நடித்தது குறித்து, இப்படத்தில்  பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரல் நடித்த சரத்குமார் பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நடிகர் சத்குமார், “முதல் நாள் சில நெருங்கி நடிக்க வேண்டிய காட்சிகளில் தயக்கம் இருந்தது.  அவர் உலக அழகி,.. நான் காட்சிக்காக நடிக்கிறேனா என புரிதல் இல்லாமல் போகலாம். ஏனென்றால் மொழி பிரச்சனை உள்ளது. அதனால் முதலில் அப்படி இருந்தது, பின்னர் மணி சார், கமான் கமான் சரத் நடிங்க. என்று ஊக்கம் கொடுத்தார், பின்னர் இயல்பானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sarathkumar Over love scens with aishwarya rai Ponniyin Selvan

People looking for online information on Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Sobhita Dhulipala will find this news story useful.