Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

சேனாபதியாக மாறும் முன் மிரட்டலான லுக்கில் கமல்ஹாசன்.. வெளியான இந்தியன்- 2 BTS ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Kamal Haasan Indian 2 Movie Shooting Spot BTS Image

Also Read | பாட்டியின் மரணம் தாங்காமல் மகேஷ்பாபு மடியில் அமர்ந்து தேம்பி அழுத மகள்.. உருக்கமான வீடியோ!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kamal Haasan Indian 2 Movie Shooting Spot BTS Image

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

Kamal Haasan Indian 2 Movie Shooting Spot BTS Image

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.

Kamal Haasan Indian 2 Movie Shooting Spot BTS Image

இந்நிலையில் அம்ரிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் சேனாபதி லுக்கிற்கு மாறும் முன் முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படமாக இந்த BTS அமைந்துள்ளது.

Also Read | பிரபல பிகில் பட இளம் நடிகைக்கு திருமணம்.. வைரலாகும் கல்யாண போட்டோஸ்! மாப்பிள்ளை யாரு?

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Indian 2 Movie Shooting Spot BTS Image

People looking for online information on Indian 2, Indian 2 Movie Shooting Spot, Kamal Haasan will find this news story useful.