Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

பாட்டியின் மரணம் தாங்காமல் மகேஷ்பாபு மடியில் அமர்ந்து தேம்பி அழுத மகள்.. உருக்கமான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.

Sitara Ghattamaneni crying on the lap of Mahesh Babu

Also Read | பிரபல பிகில் பட இளம் நடிகைக்கு திருமணம்.. வைரலாகும் கல்யாண போட்டோஸ்! மாப்பிள்ளை யாரு?

மகேஷ் பாபுவின் தாயாரும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திராதேவி 70 வயதில் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் நேற்று காலமானார். 

இந்த செய்தி டோலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. மகேஷ் பாபுவின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்று கூறப்படுகிறது.

Sitara Ghattamaneni crying on the lap of Mahesh Babu

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் இந்திரா தேவியின் உடல் வைக்கப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி பாட்டி இறந்ததை நினைத்து தனது தந்தை மகேஷ் பாபு மடியில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுத வீடியோ காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகர் மகேஷ் பாபு கொள்ளிக்குடம் சுமந்து இறுதி சடங்குகள் செய்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Sitara Ghattamaneni crying on the lap of Mahesh Babu

மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவியின் மறைவுச் செய்தி கேட்டு, சினிமா உலக நட்சத்திரங்கள் அனைவரும் மகேஷ் பாபு வீட்டிற்கு  வந்தனர். நடிகை பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, சிம்ரன், திவ்யதர்ஷினி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மகேஷ் பாபுவின் ரசிகர்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | அதிர்ச்சி! மகேஷ் பாபுவின் தாயார் மரணம்.!! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.

பாட்டியின் மரணம் தாங்காமல் மகேஷ்பாபு மடியில் அமர்ந்து தேம்பி அழுத மகள்.. உருக்கமான வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sitara Ghattamaneni crying on the lap of Mahesh Babu

People looking for online information on Ghattamaneni Indira Devi passes away, Mahesh Babu, Mahesh Babu Mother Passed away, Sitara Ghattamaneni will find this news story useful.