'என் ஃபோன்ல இருக்க ஒரே கேண்ட்டிட் பிக் இது தான்’ - பேரனுடன் வைரலாகும் சூப்பர் ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Santhosh Shivan shares candid picture of Rajinikanth with his grandson on the sets of Darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு, நிவேதா தாமஸ், பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் ச்பாட்டில் எடுத்த ரஜினிகாந்தின் கேண்டிட் பிக் ஒன்றை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘பேரக்குழந்தையுடன் ரஜினி சார். என் ஐ போனில் இருக்க ஒரே கேண்டிட் பிக் இது மட்டும் தான். இருவரும் மானிட்டரை பார்த்து ரசிக்கிறார்கள்’ என ட்வீட் செய்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவுடன் ‘தர்பார்’ கெட்டப்பில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.