அடுத்த ரவுண்டுக்கு ரெடியான ரஜினி - மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தர்பார்'. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆரம்பமாகி மே 15ம் தேதி வரை நடைபெற்றது. இடையில் பார்லிமென்ட் தேர்தலுக்கு ஓட்டளிக்க ரஜினிகாந்த், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் சென்னை வந்து மீண்டும் மும்பைக்கு சென்றனர்.

Rajini's 'Darbar' second schedule Starts Today

மே 29ம் தேதி முதல் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்று(மே 29) முதல் அந்தப் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. இதில் படத்தின் முக்கிய வில்லனாக ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி கலந்து கொள்கிறாராம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், முழு படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெறும் எனத் தெரிகிறது.

நேற்று, சென்னையிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு கன்னட நடிகர் 'பருவராகம்' ரவிச்சந்திரன் மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுவிட்டு மும்பை சென்றுவிட்டார். நாளை(மே 30) பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி செல்ல உள்ளார். பின் மீண்டும் மும்பை வந்து படப்பிடிப்பைத் தொடர்வார் எனத் தெரிகிறது.